ஜெபம் (PRAYER ) பிரன்ஹாம் கூடாரம், ஜெபர்ஸன்வில், இந்தியானா, அமெரிக்கா 53-0405M உயிர்த்தெழுதலின் கடிகாரம் (clock)-- நாம்?-- இப்பொழுது எழுந்து நிற்போமா. நாம் இப்பொழுது ஜெபத்திற்காக நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். எங்கள் பரலோகப் பிதாவே, அதிகாலமே, சீஷர்கள் கல்லறைக்கு வந்து, அது காலியாக இருப்பதைக் கண்டபோது, மகத்தானஜெயவீரர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்திருந்தாரே, அந்த மகத்தான ஜெயவீரராகிய உம்மிடம் நாங்கள் வருகிறோம். நாங்கள்அவரைத் தொழுதுகொள்ளும் நோக்கத்துடனே இந்தக் காலையில் இங்கே குழுமியிருந்து, இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து விட்டார் என்ற மகிழ்ச்சியான செய்தியை உலகத்தைச் சுற்றிலும் உரக்க தெளிவான சத்தத்தோடு பாடிக் கொண்டிருக்கிறோம். அவருடைய மகத்தான ஜீவியத்திற்காகவும், அவர் தேவ குமாரனாக இருந்தார் என்று நீர் அவர்மேல் வைத்திருக்கிற அவருடைய மகத்தான உறுதிப்பாட்டிற்காகவும் நாங்கள் உமக்கு நன்றிசெலுத்துகிறோம். அவர் வாழ்ந்த நாட்களில்: “இந்த ஆலயத்தை அழித்துப்போடுங்கள், நான் மறுபடியுமாகஅதை மூன்று நாட்களில் எழுப்புவேன்” என்று அவர் சொன்னபோது. அவர் உயிர்த்தெழுவார் என்று அவர் சொன்னதை நிறைவேற்றும்படியாக நீர் அவருக்கு வல்லமையைக் கொடுத்ததற்காக நாங்கள் உமக்கு நன்றிசெலுத்துகிறோம். நாங்கள் உமது மகத்தான கிரியைக்காக, எங்களுடைய துதிகளை உமக்குப் பாடும்படியாக, சுற்றிலும் இங்கே இந்தச் சிறு கூடாரத்தில், இந்தக் காலையில், குழுமியிருக்கையில், எங்களில் அநேகர் இக்காலையில் கல்லறையைப் பார்க்க சென்று, மலர்கள் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு, எங்கள் அன்பார்ந்தவர்களைக் குறித்து, புல் வளர்ந்த நிலத்தின் மேல் பாகத்திற்கு அடியில், அவர்களுடைய சரீரங்களை நாங்கள் வைத்த அந்நேரத்தை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தோம். அதன்பிறகு விசுவாசத்தினாலே, அதோ அங்கே அந்த சமுத்திரத்தையும் தாண்டி, காலியாக இருக்கும் யோசேப்பின், அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பின் கல்லறையை நோக்கிப் பார்க்கிறோம். அவர் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்து விட்டார். அவருக்குள் நித்திரையடைந்த எங்கள் அன்பார்ந்தவர்களும்கூட ஏதோவொரு மகிமையான காலையில் உயிர்த்தெழுவார்கள். ஏதோவொரு நாளில், உம்மைப் பின்பற்றுகிற எங்கள் எல்லாருக்குமே ஒரு உண்மையான ஈஸ்டர் இருக்கும். இப்பொழுது எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னித்தருளும். எங்களை ஆசீர்வதித்து, எப்பொழுதும் எங்களை நம்பிக்கைக்குரியவர்களாகவும் நெருக்கமாகவும், வைத்துக்கொள்ளும்.கிறிஸ்துவின் நாமத்தில், நாங்கள் இதைக் கேட்கிறோம். ஆமென்.